2026 எப்படி இருக்கும்? – பகீர் கிளப்பும் பாபா வங்காவின் பயங்கரமான கணிப்புகள்!
பல்கேரியாவைச் சேர்ந்த இந்த அற்புதமான தீர்க்கதரிசினி, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால், அவரது உள்ளுணர்வு சக்தி மூலம் எதிர்காலத்தை கணித்து, பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டதாக நம்பப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது? – இந்த கேள்விக்கு பதில் சொல்ல மறைந்த தீர்க்கதரிசினி பாபா வங்கா விட்டுச் சென்ற ஆருடங்கள் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல்கேரியாவைச் சேர்ந்த இந்த அற்புதமான தீர்க்கதரிசினி, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால், அவரது உள்ளுணர்வு சக்தி மூலம் எதிர்காலத்தை கணித்து, பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், பராக் ஒபாமாவின் அதிபர் பதவி, பிரெக்சிட் (பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுதல்), மற்றும் சமீபத்திய ஜப்பான் நிலநடுக்கம் போன்றவற்றை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.
இப்போது, 2026 குறித்த அவரது கணிப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவை பெரும்பாலும் எச்சரிக்கை தரும் வகையில் உள்ளன.
அரசியல் நெருக்கடி & புதினின் வீழ்ச்சி?
பாபா வங்கா, 2026-ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சி முடிவுக்கு வரும் என கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவை ஆண்டு வரும் புதின், இந்த ஆண்டு ஒரு புதிய தலைவரின் எழுச்சியால் அதிகாரத்தை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
3வது உலகப்போர் தொடங்குமா?
இன்னொரு பகீர் கணிப்பு – 2026-ல் உலகளாவிய போர் மூளும் என்பது. சீனா – தைவான் மோதல், ரஷ்யா – அமெரிக்கா இடையேயான பதட்டம் உச்சத்தை எட்டி, அது மூன்றாம் உலகப்போராக வளரக்கூடும் என கருதப்படுகிறது.
ஏ.ஐ. மனிதர்களை ஆட்கொள்ளுமா?
2026-ல் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும். அதன் மூலம், மனித குலத்தின் மீது ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் என பாபா வங்கா எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்வார்களா?
இன்னும் ஒரு அதிரடிக் கணிப்பு – 2026 நவம்பரில், ஒரு விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும். அதன் மூலம், வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் முதல் தொடர்பை ஏற்படுத்துவார்கள் என அவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இயற்கை பேரழிவுகள் & நிதி நெருக்கடி
பாபா வங்கா, 2026-ல் பூமியின் 8% பகுதி இயற்கை சீற்றங்களால் (பூகம்பம், வெள்ளம், சூறாவளி) பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் கணித்துள்ளார். பங்குச்சந்தை சரிவு, நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை நடக்கும். இதன் மூலம், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும்.
பாபா வங்காவின் இந்த கணிப்புகள் பெரும்பாலும் எதிர்மறையானவை. இருப்பினும், இவை அனைத்தும் நிச்சயமாக நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தீர்க்கதரிசனங்கள் என்பது வழிகாட்டுதல்கள் மட்டுமே; எதிர்காலம் எப்போதும் மனிதர்களின் தேர்வுகள் மீது சார்ந்தது.
