கனவுல கூட பாகிஸ்தானால் பிசிசிஐ மாதிரி வர முடியாது... வருத்தப்படும் – வாசிம் அக்ரம்!
அதைவிட பல மடங்கு வருமானம் ஐபிஎல் தொடரால் கிடைக்கும் நிலையில், அது மிகப்பெரிய சந்தையாக பிசிசிஐக்கு மாறி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் வருமானம் உள்ளது.
அதைவிட பல மடங்கு வருமானம் ஐபிஎல் தொடரால் கிடைக்கும் நிலையில், அது மிகப்பெரிய சந்தையாக பிசிசிஐக்கு மாறி இருக்கிறது.
இந்தியாவில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறாத மைதானங்களில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நடத்தி பிசிசிஐ பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.
இந்தியா முழுக்க மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களை உருவாக்குவதில் பிசிசிஐ தூர நோக்குடன் செயற்படுகின்றது.
குறிப்பாக இந்தியாவின் கடைசி மூலைக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதில் பிசிசிஐ குறியாக உள்ளது.
மேலும் இந்தியாவின் தரம்சாலா மைதானம் உலக கிரிக்கெட்டில் சிறந்த அழகான மைதானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் பராமரிப்பை பிசிசிஐ மிகச் சிறப்பாக செய்து வருகிறது.
தற்பொழுது வாசிம் அக்ரம் கூறும் பொழுது “வடக்கு பாகிஸ்தானில் ஏன் புதிய மைதானங்களை உருவாக்கவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் மூன்று மைதானங்களையே நாங்கள் சரியாக பராமரிப்பது இல்லை.
டிரோன் காட்சியின் மூலம் கடாபி மைதானத்தின் மேற்கூரை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பார்த்தீர்களா. நம்மிடம் இருக்கும் மூன்று மைதானங்களை நாம் ஒழுங்காக பராமரிக்க கூட முடியாமல் இருக்கும் பொழுது, தரம்சாலா போன்ற புதிய மைதானங்களை உருவாக்கி பராமரிப்பது என்பது வெறும் கனவாக மட்டும்தான் இருக்க முடியும்.
ஆனால் இதுபோன்ற அழகான மைதானத்தை உருவாக்க எங்களிடம் அபோதாத் நல்ல இடமாக இருக்கிறது” என்று கூறி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |