நினைத்துக் கூட பார்க்கவில்லை... அனைத்தையும் அணிக்கு வழங்கினேன்.. 18 ஆண்டுக்கால கனவு.. விராட் கோலி!
18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன்.
 
                                18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி “இந்த வெற்றி எங்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் எங்கள் ரசிகர்களுக்காகவும் முக்கியம்.
18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன். என்னுடைய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன்.
இந்த கோப்பை எனக்கு கிடைத்திருப்பது உண்மையிலேயே நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது. இந்த நாள் என் வாழ்க்கையில் வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கடைசி பந்து வீசப்பட்டவுடன் என்னையும் மீறி நான் உணர்ச்சி வசப்பட்டேன். என்னைப்போல டிவிலியர்ஸும் இந்த அணிக்காக கடுமையாக உழைத்து இருக்கின்றார்.
ஏனென்றால் ஆர் சி பி அணிக்காக பல ஆட்டநாயகன் விருதை வாங்கி இருப்பது அவர் மட்டும்தான். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றும், அவர்தான் முதல் இடத்தில் இருக்கின்றார்.
 
நாங்கள் கோப்பையை வெல்லும் போது மேடையில் டிவில்லியர்ஸ் இருப்பதும் முக்கியம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த ஐபிஎல் வெற்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கிய இடத்தில் இருக்கின்றது.
18 ஆண்டு காலம் தான் ஆர்சிபி அணிக்கு விசுவாசமாக இருந்து உள்ளேன். எவ்வளவு விஷயங்கள் நடந்தாலும், நான் இந்த அணியை விட்டு செல்ல மாட்டேன் என்று தொடர்ந்து அவர்களுடன் இருந்திருக்கின்றேன்.
ஆர் சி பி அணியுடன் கோப்பையில் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. இந்த கோப்பையை வென்றது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கின்றது.
நான் என்னுடைய கடைசி கிரிக்கெட் வாழ்க்கை வரை இந்த அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ஒரு விளையாட்டு வீரராக நான் இந்த அணிக்காக கடுமையாக உழைத்து இருக்கின்றேன்.
இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஒரு கோப்பை மட்டும் தான் என்னிடம் இல்லாமல் இருக்கின்றது. தற்போது அதுவும் கிடைத்து விட்டது” என விராட் கோலி கூறினார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






