விராட் கோலி செய்த மொகா சாதனை... ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனையொன்றை படைத்துள்ளார்.
 
                                நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனையொன்றை படைத்துள்ளார்.
அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை, 53 ரன்கள் எடுத்திருந்த போது, விராட் கோலி படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரோஹித் சர்மா - விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்ததுடன், ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
தொடர்ந்து விராட் கோலி - சர்ஃபராஸ் கான் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்ததுடன், இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சர்ஃபராஸ் கான் 42 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட அரைசதத்தை எட்டினார். விராட் கோலி 70 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
தொடர்ந்து விராட் கோலி 53 ரன்களை எட்டிய போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.
முன்னதாக, இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய 3 வீரர்கள் மட்டுமே 9 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர்.
எனினும், இந்த 4 பேரில் மிகவும் தாமதமாக 9 ரன்களை எட்டிய வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளதுடன், 9 ஆயிரம் ரன்களை கடப்பதற்கு விராட் கோலிக்கு 197 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






