2 மெகா உலக சாதனை படைத்த விராட் கோலி.. சச்சின் - சங்கக்கர - ஜெயசூர்யா சாதனைகள் முறியடிப்பு!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக இன்று (02) விளையாடியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக இன்று (02) விளையாடியது.
டாஸில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. இந்திய அணிக்கு இது மிகவும் சாதகமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் துவக்க வீரராக வந்த ரோகித் சர்மா மதுசங்கவின் முதல் பந்தில் பவுண்டர் அடித்து அடுத்த சிறந்த பந்து ஒன்றில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே விராட் கோலி விளையாட வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இன்றைய மும்பை ஆடுகளத்தில் பந்து எதிர்பார்த்த வேகத்தில் வந்து சேரவில்லை. இதன் காரணமாக கோலி மற்றும் கில் இருவரும் ஆரம்பத்தில் நிறைய சிரமப்பட்டார்கள்.
இருவருமே தந்த கேட்ச் வாய்ப்பை இலங்கை அணி வீணடித்தது. இதற்கு அடுத்து சுதாரித்த இருவரும் ஆடுகளத்தை உணர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்கள் கொண்டு வந்தார்கள். பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிவேற்கும் பின் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 60 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 11 வது ஓவரில் 34 ரன்கள் எட்டிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத ஒரு அரிய சாதனையை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது முறையாக ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை ஏழு முறை எடுத்து சச்சின் சாதனையை சமன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆசியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8000 ரன்கள் கடந்த வீரர் என்ற இன்னொரு சாதனையையும் இந்த போட்டியில் படைத்திருக்கிறார்.
விராட் கோலிக்கு 159 இன்னிங்ஸ் இதற்கு தேவைப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் சச்சின் 188, சங்ககார 213, ஜெய்சூர்யா 254 இன்னிங்ஸ்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |