பெண் உதவியாளருடன் அத்துமீறிய பிரித்தானிய சுகாதாரச் செயலரின் தற்போதைய நிலைமை

உலகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்த காலத்தில், மக்களுக்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அறிவித்து வந்த பிரிட்டன் சுகாதாரச் செயலர் மேட் ஹான்காக் தானே அந்த விதிகளை மீறியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அவரும், தன்னுடைய உதவியாளரான ஜினா கொலாடேஞ்சலோவும் ஒருவருக்கொருவர் அண்மித்திருப்பது காட்டும் CCTV காட்சிகள் வெளியானது அந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கியது. அரசு விதித்திருந்த நெறிமுறைகளை தானே பின்பற்றாதது குறித்த கண்டனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹான்காக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சர்ச்சைக்கு பின் பொதுவாக மக்கள் வெளிப்படையாக செயல்களில் ஈடுபடத் தயங்குவார்கள். ஆனால் ஹான்காக், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிக வருமானத்தை ஈட்டினார். அதோடு, புத்தகம் எழுதியும், பல்வேறு தனிப்பட்ட திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், அவருடைய குடும்பத்தினரின் வணிக நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பிலும் பணியாற்றுகிறார். தற்போது ஹான்காக் மற்றும் ஜினா, பொதுவான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், உணவகங்கள் மற்றும் பயண தலங்களுக்கு செல்வதும் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.