39 பந்தில் செஞ்சுரி அடித்து தெறிக்க விட்ட ட்ராவிஸ் ஹெட்: 8 சிக்ஸ், 9 ஃபோர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து கதறவிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து கதறவிட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அந்த அணிக்கு அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் துவக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ட்ராவிஸ் ஹெட் சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 39 பந்துகளில் சதம் கடந்தார் அவர். 9 ஃபோர், 8 சிக்ஸ் அடித்த பின் 41 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த போது ஹைதராபாத் அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்ததுடன், ஐபிஎல் வரலாற்றிலேயே இது நான்காவது அதிவேக சதம் ஆகும்.
ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த பின் கிளாசன் அதிரடி ஆட்டம் ஆடினார். 15 ஓவர்களில் எல்லாம் ஹைதராபாத் அணி 200 ரன்களை கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |