டி20 அல்ல.. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே பெருமை.. கோலி அதிரடி!
தென்னாப்பிரிக்கா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடக்கவுள்ளது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் களமிறங்கவுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவில் உள்ள டக்ஸ் ஓவல் மைதானத்தில் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். இதனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஸ்பெஷல். டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் நமக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும். அதனால் அனைத்து நாட்களிலும் நாம் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளம். வரலாறு, கலாசாரம், பெருமை என்று தெரிவித்த விராட் கோலி, இந்திய அணிக்காக நீண்ட இன்னிங்ஸை விளையாடி வெற்றிபெறுவது மிகச்சிறந்த உணர்வை அளிக்கும் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் தான் எனக்கு எல்லாமே என்றும், இந்தியாவுக்காக 100 போட்டிகளுக்கும் மேல் விளையாடுவதை பெருமையாக கருதுவதாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |