டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியானது பிசிசிஐ தகவல்!

இந்த வருடத்தில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியானது பிசிசிஐ தகவல்!

இந்த வருடத்தில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் 17ஆவது சீசன் முடிந்த உடனே, ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கவுள்ளது.

ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். 

லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்தார்.

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் போன்ற 10 வீரர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 பேர் பட்டியலில் இன்னமும் 4-5 வீரர்களின் இடங்கள் மட்டுமே நிரப்பப்படவில்லை என்றும், ஏப்ரல் 28ஆம் தேதிவரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வைத்து, அந்த 4-5 இடங்களையும் நிரப்ப, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் முடிவு செய்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28அம் தேதி, இந்திய அணி வீரர்கள் பட்டியல் தயாராகிவிடுமாம். ஏப்ரல் 29ஆம் தேதி அணித் தேர்வு குறித்து ஆலோசிக்கபட்டு, தகுதியான வீரர்களைதான் சேர்த்திருக்கிறோமா என்பதை உறுதி செய்துவிட்டு, ஏப்ரல் 30ஆம் தேதி அணியை அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் மே 21ஆம் தேதிமுதல் துவங்க உள்ளதுடன், அதில், இடம்பெறும் டி20 உலகக் கோப்பையில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் முக்கிய அணிகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...