கோலி ஆட்டமிழந்ததும் ஓவராக குதித்த வங்கதேச வீரர்... திருந்தவே மாட்டிங்களா ப்ரோ!
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
 
                                டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமாக விளையாடிய போதும், தன்சின் ஹஸன் வீசிய ஓவரில் எதிர்பாரமல் ஆட்டம் இழந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உறுதியாகி விடும்.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
ரோகித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 
இதன் மூலம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், 8.1 வது ஓவரில் 21 வயதான வங்கதேச வீரர் தன்சீம் ஹசன் வீசிய பந்தை விராட் கோலி அடிக்காமல் தவற விட, அது போல்டானது.
கோலி அவுட் ஆனதும் தன்சீம் ஓவராக குதித்து கொண்டாடியதுடன், விராட் கோலியை அநாகரிகமாக பேசும் வகையில் சைகையை காட்டினார். 
ஆனால், விராட் கோலி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சென்று விட்ட நிலையில், தன்சீம்மின் இந்த நடவடிக்கைக்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
21 வயதான தன்சிம் ஹசன் இரண்டு ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தன்சீம் திறமையான வீரராக தான் தெரிந்தாலும், இது போன்ற செயல்களால் அவரால் ஜொலிக்க முடியாது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






