இந்தியா இரண்டு ஓவரால் தோற்கும்.. முன்பே கணித்து சொன்ன முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா
இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.
 
                                2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய அணி லீக் சுற்றில் வெற்றிகளை குவித்தாலும், அரை இறுதி, இறுதிப் போட்டி போன்ற நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணியிடம் ஒரு பலவீனம் வெளிப்படும். அதை வைத்து இரண்டே ஓவரில் எதிரணி, இந்தியாவை நிலைகுலைய வைத்து விடும் என அவர் இந்திய அணியை எச்சரித்து இருந்தார்.
அண்மையில் மிஸ்பா உல் ஹக் ஒரு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசும் போது, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை பெற்று வருவது அரை இறுதி, இறுதிப் போட்டியில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறி இருந்தார்.
தொடர்ந்து வெற்றி பெறுவதால் இந்திய அணி உச்சத்தில் இருக்கிறது. அப்படி தோல்வியே அடையாமல், பெரிய தவறுகளே செய்யாமல் உச்ச நிலையில் இருக்கும் போது, இந்திய அணிக்கு நாக்-அவுட் போட்டிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக இருக்கும்.
ஆனால், ஏற்கனவே இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்விகளை சந்தித்து விட்ட ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அத்தனை அழுத்தம் இருக்காது என்பதை சுட்டிக் காட்டி, இந்திய அணிக்கு இரண்டு ஓவர்கள் அழுத்தம் கொடுத்தாலே நிலை குலைந்து விடும்.
 
அந்த அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் இந்தியா தவிக்கும் எனக் கூறி இருந்தார் மிஸ்பா உல் ஹக். அவர் கூறியது போலவே, இந்தியா பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா 10வது ஓவரில் ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து 12வது ஓவரில் அதுவரை பந்து வீசி இருக்காத ஆடம் ஜம்பாவை பந்து வீச அழைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ். அந்த ஓவரில் கோலி, ராகுல் சிங்கிள் ரன் மட்டுமே எடுத்தனர்.
இந்த 2 - 3 ஓவர் அழுத்தத்துக்கு பின் இந்தியா 29 ஓவர்களில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தது. அதனாலேயே இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குறைந்த ரன்கள் எடுத்ததால் அதை வைத்து பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் இந்தியா தோல்வி அடைந்தது. மிஸ்பா உல் ஹக் சொன்ன அந்த இரண்டு ஓவர்கள் 10 மற்றும் 11வது ஓவர்கள் தான்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






