ருதுராஜால் அப்செட் ஆன மேக்ஸ்வெல்.. போட்டியை மாற்ற அந்த சம்பவம்தான் காரணம்!

ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கிய மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் சேர்த்தார். 

ருதுராஜால் அப்செட் ஆன மேக்ஸ்வெல்.. போட்டியை மாற்ற அந்த சம்பவம்தான் காரணம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் இந்தியாவிடம் டி20 தொடரை இழக்காமல் இருக்கலாம் என்ற இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 19 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக பந்து வீச முடியாத நிலையில் கடைசி ஓவரை வீச சுழற் பந்துவீச்சாளர் கிளென் மேக்ஸ்வெல் வந்தார்.

அவர் வீசிய அந்த கடைசி ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் மூன்று சிக்ஸ், இரண்டு ஃபோர் அடிக்க மொத்தம் 30 ரன்கள் கிடைத்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத மேக்ஸ்வெல் தன்னால் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக உணர்ந்தார்.

பின்னர், ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கிய மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

அவர் வந்த பின் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்த போதும் ஒரு பக்கம் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் மேக்ஸ்வெல். தான் கொடுத்த 30 ரன்களால் ஆஸ்திரேலியா தோல்வி அடையக் கூடாது என நினைத்த அவர் கடைசி வரை நிற்பது என்பதில் உறுதியாக இருந்தார்.

கேப்டன் மேத்யூ வேட் ஒரு பக்கம் ரன் குவிக்கத் துவங்க கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. வேட் தன் அதிரடியால் 19வது ஓவரில் 22 ரன்கள் சேர்த்தார்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் வேட் முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். கடைசி நான்கு பந்துகளை மேக்ஸ்வெல் சந்தித்தார். வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸ், மூன்று ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

47 பந்துகளில் சதமும் அடித்தார். போட்டிக்கு பின் பேசிய கேப்டன் மேத்யூ வேட், மேக்ஸ்வெல் அந்த 30 ரன்களை விட்டுக் கொடுத்ததால் அதை சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தான் சதம் அடித்ததாக கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...