இந்திய அணியில் தமிழக இளம் வீரருக்கு இடமில்லை.. மீண்டும் அதே தவறு... ரசிகர்கள் கொதிப்பு!

டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.

இந்திய அணியில் தமிழக இளம் வீரருக்கு இடமில்லை.. மீண்டும் அதே தவறு... ரசிகர்கள் கொதிப்பு!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தநிலையில்,  அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கின்றது.

அத்துடன், டி20 உலக கோப்பை அடுத்த வருடம் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது இருந்தே இந்திய அணியை வலுப்படுத்த தேர்வு குழுவினர் தயாராகியுள்ளனர்.

ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் அணியில் நடு வரிசையில் போதிய இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற குறை இந்தியாவை பெருமளவில் பாதித்தது. 

இறுதிப் போட்டியில் கூட சூரியகுமார் யாதவ் தடுமாறிய நிலையில், இதனால் டி20 பேட்ஸ்மேனான சூரிய குமாரை ஒரு நாள் போட்டியில் சேர்த்தது தவறு என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.

அதில் சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷன், ஜெய்ஸ்வால்,திலக் வர்மா, ரிங்கு சிங்,ஜித்தேஸ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன், 22 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சனும் அணியில் சேர்க்கப்படவில்லை.

டி20 அணியில் இருந்து ரோஹித், கோலியை நிரந்தரமாக நீக்க முடிவு? இனிமேலும் முடியாது.... பிசிசிஐ திட்டம்!

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே சாய் சுதர்சன்தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். இதனால் இந்தியாவின் அடுத்த நட்சத்திரமாக இவர் அறியப்பட்டார். 

இதைப்போன்று இந்திய ஏ அணியிலும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அதிலும் அவர் அரைசதம் அடித்து கலக்கினார். இதனால் சீனியர் அணியில் சாய் சுதர்சனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் சாய் சுதர்சன் பெயரை தேர்வு குழுவினர் அறிவிக்கவில்லை. 

திறமையான இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் தான் இந்திய அணி இவ்வாறு முக்கிய போட்டிகளில் தடுமாறுவதாகவும், சாய் சுதர்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்காமல் தேர்வு குழு தாமதம் செய்கிறது என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...