ஹர்திக் பாண்டியா கனவு கலைந்தது... மண்ணை வாரி போட்ட பிசிசிஐ.. கேப்டன் கனவு அவ்வளதானா?
ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கி இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆட முடியும்.
இந்திய டி20 அணியின் ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டனாக இடம்பிடித்து ஒருநாள் அணியின் கேப்டனாகவும் இடம்பிடிபார் என பலரும் எதிர்பார்த்த நிிலையில் அதில் பிசிசிஐ மண்ணை வாரி போட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் அரை இறுதியுடன் வெளியேறிய போதே பிசிசிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்து அனுப்ப திட்டமிட்டது .
அதன்படி, 2022 டி20க்கு பின் நடந்த சில டி20 தொடர்களில் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். ரோஹித் சர்மா, விராட் கோலி அதன் பின் டி20 அணியில் இடம் பெறவே இல்லை.
இந்த நிலையில், பிசிசிஐ அடுத்து டி20 உலகக்கோப்பைக்கான வேலைகளை துவக்கி உள்ளது. ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கி இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆட முடியும்.
ஜடேஜாவை பார்த்து பொறாமையால் பொங்கிய அஸ்வின்.. என்ன சொன்னார் தெரியுமா?
அடுத்து டி20 உலகக்கோப்பையில் தான் நேரடியாக பங்கேற்க முடியும். இடையே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவரால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், தொடர் பயிற்சி இல்லாமல் ஹர்திக் பாண்டியாவை நேரடியாக உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக நியமிப்பது அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்பதால் பிசிசிஐ தன் திட்டத்தில் மாற்றம் செய்ய உள்ளது.
அதன் படி ரோஹித் சர்மாவை மீண்டும் டி20 கேப்டனாக நியமிக்க உள்ளது பிசிசிஐ. அப்படி செய்தால் மற்ற வீரர்கள் ரோஹித் சர்மா தலைமையை எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். அணியில் சுமூகமான சூழல் நிலவும் என பிசிசிஐ கருதுகிறது.
பிசிசிஐ எடுத்துள்ள இந்த அதிரடி தீர்மானத்தால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் கனவு கலைந்துள்ளது.
டி20 தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் - கங்குலி நம்பிக்கை!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |