மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. 

மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 6 ரன்களும், இசான் கிஷன் டக் அவுட்டும் வெளியேறினர். தினத்தில் சூரியகுமார் யாதவும் அபாரமாக விளையாடும் 39 ரன்கள் சேர்த்தார்.

எனினும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ருதுராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். இதன் மூலம் அவர் 57 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் மட்டும் ருதுராஜ் 30 ரன்கள் விளாசினார். 

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 8 பவுண்டர்களை விளாசி 18 பந்துகளின் 35 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்த அணிக்குதான் அதிக வாய்ப்பு  - ரவி சாஸ்திரி

ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதியான நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் மேத்தீவ் வெட் ஜோடி அபாரமாக விளையாடியது. கடைசி இரண்டு ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரை அக்சர் பட்டேல் வீச அதில் ஆஸ்திரேலியா மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசியது.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா ஒரு யாக்கர் கூட வீசாமல் நன்றாக ஷார்ட் பால் வீசி அடிப்பதற்கு ஏதுவாக பந்து வீசி இருந்தது ரசிகர்களையே கோபமடைய செய்தது. 

இதனால் ஆஸ்திரேலியா அணி அந்த ஓவரில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் என 23 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது. இதன் மூலம் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களும் அடங்கும். 

இதேவேளை, ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணி கடைசி ஓவரில் நான்கு பில்டர்களை மட்டும் பவுண்டரில் நிறுத்தியதும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...