டி20 உலககோப்பை... பிசிசிஐ போட்ட ஸ்கெட்ச்... ருதுராஜ் மற்றும் கில் மோதல்!
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஜனவரியில் இந்திய மண்ணில் விளையாடுகிறது.
2024 ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளதுடன், இதில் 20 அணிகள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், எல்லா அணிகளும் உலகக் கோப்பையை முன்னிட்டு தீவிரமான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில்தான், அடுத்த வருடம் ஜூலை மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு மூன்றே மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் மாத்திரமே விளையாட உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஜனவரியில் இந்திய மண்ணில் விளையாடுகிறது.
இதன் காரணமாக இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக போதிய பயிற்சி இருக்காது என்கின்ற நிலையில், ஐபிஎல் தொடரை பயிற்சிக் களமாக பிசிசிஐ எதிர்பார்த்து உள்ளது. இது எந்த அளவிற்கு பயன் கொடுக்கும் என்பது உலகக் கோப்பை போட்டியின் முடிவில்தான் தெரிய வரும்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக வருவதற்கு பிசிசிஐ தரப்பில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, டி20 உலகக்கோப்பைக்கு இந்திய கேப்டனாக திரும்புவார் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
எனவே, ஜெய்ஷ்வால் இடதுகை வீரர் என்பதால் போட்டியின் துவக்க இடத்தில் ரோகித் சர்மா உடன் கட்டாயம் இடம் பெறுவார் என்பதும் உறுதியான ஒன்றாகவே இருக்கிறது. எனவே டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் என்று முடிவாகிவிட்டது.
மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக, ஒருவேளை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இசான் கிஷான் விக்கெட் கீப்பராக இடம் பிடித்தால், கூடுதல் பொறுப்பாக மாற்றுத் துவக்க ஆட்டக்காரர் இடத்தையும் வகிப்பார். எனவே மேற்கொண்டு துவக்க ஆட்டக்காரர்களுக்கு அணியில் இடம் கிடையாது.
ஆனால் இஷான் கிஷான் இடம் பெறவில்லை என்றால், மூன்றாவது துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்திற்கு ருதுராஜ் மற்றும் கில் இருவரும் இருக்கும் நிலையில், இருவரில் யாரை தேர்வு செய்யலாம்என்பதற்கு, பிசிசிஐ ஒரு திட்டம் வகுத்திருக்கிறது.
அதாவது, வருகின்ற ஐபிஎல் தொடரில் ருதுராஜ் மற்றும் கில் இருவரில் யார் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு தரலாம் என்று திட்டம் இடப்படுள்ளதாக தெரிகிறது.
எனவே, நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ருதுராஜ் மற்றும் கில்லுக்கு இடையே ஒரு தனி போட்டி நடப்பது உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |