5 வயதில் மகனை தவிக்கவிட்டு நடிகையுடன் 3ஆவது திருமணம் செய்த சோயப் மாலிக்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்து விட்டு மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்து விட்டு மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 5 வயதில் இஸ்ஹான் மிர்சா மாலிக் என்று ஒரு மகன் இருக்கும் நிலையில், சானியாவை கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து இருந்த போதும் மகனை சந்திக்க சோயப் மாலிக் அவ்வப்போது வந்து சென்றார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இதனையடுத்து, சானியா மிர்சா தனி ஆளாக மகனை வளர்க்க அவர் ஆயத்தமாகி விட்டார்.
சோயப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம்.
2002இல் ஆயிஷா சித்திக்கி என்பவரை திருமணம் செய்த சோயப் மாலிக் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இரண்டாவதாக சானியா மிர்சாவை திருமணம் செய்தார்.
அப்போது சானியா பாகிஸ்தானுக்கு சென்று விடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், சானியா இந்தியாவிலேயே தங்கினார்.
கடந்த ஆண்டு டென்னிஸில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்ற பின் அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |