சிஎஸ்கே வீரரை வைத்து கட்டம் கட்டிய ரோகித் சர்மா... ஹர்திக்கிற்கு ஆப்பு.. இனி அதுக்கு வாய்ப்பே இல்லை?
தமது கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
 
                                ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதுதான் அண்மைய காலமாக இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் ரோகித் மற்றம் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பனிப்போர் காரணமாகவே ரோகித் சர்மாவும் விராட் கோலி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
தற்போது இந்திய அணியில் இடமே கிடைக்கக் கூடாது என்பதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா ஒரு கட்டம் கட்டியுள்ளார்.
 
ஆல்ரவுண்டராக இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருந்தாலும் காயம் காரணமாக அவரால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியவில்லை.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா சேர்த்து உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் சிவம் துபே சேர்க்கப்பட்டு அவருக்கு பிளேயிங் லெவனில் இடமே தரப்படவில்லை.
இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு சிவம் துபே தான் வேண்டும் என்று கேட்டு ரோஹித் சர்மா அணியில் எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் சிவம் துபே சரியாக விளையாடிவிட்டால் ஹர்திக் பாண்டியாவை ஓரங்கட்டி விட்டு சிவம் துபேவை பிளேயிங் லெவனில் சேர்த்து ஆப்பு வைக்கலாம் என்பதுதான் ரோகித் சர்மாவின் மாஸ்டர் பிளான் என்று கூறப்படுகின்றது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






