நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை... பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
 
                                ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மின் காரணமாக மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. அவர் 90% பந்துகளை சரியான இடத்தில் இருந்து வீசுகிறார். அதிக அகலமான பந்துகளும் இல்லாம, அதிக ஃபுல்லர் பந்துகளும் இல்லாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை வீசி பேட்டர்களுக்கு அழுத்தத்தை வழங்கியுள்ளார்.” என்றார்.
 
அத்துடன், இத்தொடரில் நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை. மேலும் அதற்காக மட்டும் விளையாட விரும்பவில்லை. மேலும் சில பந்துகளை எதிர்கொள்ள சிலர் சிரமப்பட்டனர், உண்மையில் ஷுப்மன் கிலை தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று விரும்பினோம்.
நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை என்றால், அதை கட்டாயப்படுத்துவதில் அர்த்தமில்லை. சுற்றுப்பயணத்தில் இருந்த பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் பேசினேன். அவர்களும் ஒருவிதத்தில் ஒப்புக்கொண்டாலும், மற்றொரு விதத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நீங்கள் அணியை வெற்றிப்பெற செய்யும் போது, அணிக்கு என்ன தேவை என்பதைப் பார்த்து, அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அத்துடன், தனது மோசமான ஃபார்மின் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய அவர், கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒப்படைத்தார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






