இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்.. ரோகித்தின் மாஸ்டர் பிளான்
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இன்று நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இன்று நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
நியூயார்க் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்ள் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றதால், கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் அமெரிக்க அணி உள்ளதுடன், இந்திய அணியும் பாகிஸ்தானை வீழ்த்தினாலும், பேட்டிங்கில் உள்ள சில பிரச்சனைகளை இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சரி செய்வார் என கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிறங்கிய விராட் கோலியால் பவர் பிளேவில் அதிரடி காட்ட முடியவில்லை. இதனால் அவரை மூன்றாவது வீரராகவே களம் இறக்க ரோஹித் சர்மா முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது.
அத்துடன், ஜெய்ஷ்வாலை தொடக்க வீரராக களமிறக்கவிட்டு, பேட்டிங் மற்றும் பில்டிங்கில் தடுமாறி வரும் சிவம் துபேவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்க்க வாய்ப்பு உள்ளது.
சிவம் துபே அணியில் தேவை என ரோகித் சர்மா நினைத்தால் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தடுமாறும் ஜடேஜாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை அந்த இடத்தில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
ரோகித் அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தால் நிச்சயம் சிவம் துபே அணியில் இருப்பார். இதனால் இந்தியா எந்த மாதிரி அணியுடன் களமிறங்க உள்ளது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |