ரோகித், அகர்கர் டெல்லியில் முக்கிய பேச்சு... இந்திய அணியில் வாய்ப்பு யாருக்கு?

மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்படுவது கட்டாயம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரோகித், அகர்கர் டெல்லியில் முக்கிய பேச்சு... இந்திய அணியில் வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று  டெல்லியில் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்படுவது கட்டாயம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இந்திய அணி  நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம். 

இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் டெல்லிக்கு வந்துள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜித்தேஷ் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. 

இதனால், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் முதன்மை வாய்ப்பாக இருப்பார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 9 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 385 ரன்களை விளாசி இருக்கிறார். கேஎல் ராகுல் 9 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட 378 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கேஎல் ராகுல் இந்திய டி20 அணியில் விளையாடவில்லை. இதனால் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவாரா அல்லது சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவாரா என்று தெரியவில்லை.

இன்றைய சந்திப்புக்கு பிறக்கு முக்கிய தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...