ஹர்திக் எடுத்த முடிவுக்கு ரோஹித் கடும் அதிருப்தி... மீட்டிங்கில் நடந்தது இதுதான்!
மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை ரோஹித் சர்மா உட்பட சிலர் இன்னமும் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை ரோஹித் சர்மா உட்பட சிலர் இன்னமும் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து உள்ளது. எனினும், இதற்குமுன், 2015ல் இப்படி தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்று, அதன்பிறகு கோப்பை வென்ற வரலாறு உள்ளது.
எனினும், மும்பை ஹர்திக் பாண்டியா, பௌலர்களை பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாக கருதப்படுதுவதுன், பவர் பிளேவில் பும்ரா, ஆகாஷ் மத்வால் ஆகியோரை பயன்படுத்தினால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றாலும், அவர்களை பயன்படுத்துவது கிடையாது.
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக உள்ளதால்தான் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஆகாஷ் மத்வால் போன்றவர்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹட்ரிக் தோல்வியை சந்தித்து இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில், வீரர்களின் அழுத்தங்களை போக்க ஒரு பழைய திட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும், இதற்கு ரோஹித் ஆதரவு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, அணி மீட்டிங், பயிற்சி இடங்களுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஜோக்கர் போன்ற கெட்டப்கள் போடப்படும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்ததாகவும், இதற்கு அதிருப்தி தெரிவித்து ரோஹித் ஆதரவு வீரர்கள் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பில் பேசிய ரோஹித், ''அணியை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஹட்ரிக் தோல்வியை சந்தித்து உள்ளோம். ஆனால், அதைவிட்டுவிட்டு இது தற்போது தேவைதானா? முன்பு இருந்தே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். இது சிலருக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும்.
இந்த தண்டனை ஜாலியானதுதான். நான் ஏற்கும் நிலையில் இல்லை. தற்போது, அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்'' எனக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோஹித் இப்படி அதிருப்தியை வெளிப்படுத்தி சென்றப் பிறகு, ரோஹித் சர்மா ஆதரவு வீரர்கள் திலக் வர்மா, பும்ரா போன்றவர்களும் வெளியேறியதாகவும், ஹர்திக் ஆதரவு வீரர்கள் இஷான் கிஷன் போன்றவர்கள் இதனை அணிந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |