15 பேர் அணியில் இல்லாத ரிங்கு சிங்.. பீல்டிங் செய்தது எப்படி?

இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன.

15 பேர் அணியில் இல்லாத ரிங்கு சிங்.. பீல்டிங் செய்தது எப்படி?

இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல்.ராகுல் சதத்துடன் 245 ரன்கள் எடுத்தது. கேஎல்.ராகுல் இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்கி இந்திய அணிக்கு சதம் அடித்திருக்கிறார்.

இரண்டாவது நாள் பேட்டிங் செய்ய ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் ஆட்டம் இழக்காமல் 140 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் முன்னிலைப் பெற உதவியிருக்கிறார்.

தற்பொழுது தென்னாபிரிக்கா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி அடுத்த 30, 40 ரன்களுக்கு தென்னாபிரிக்காவை ஆட்டம் இழக்க செய்ய வேண்டும்.

அத்துடன், தென்னாபிரிக்கா 70 ரன்கள் லீடிங் எடுத்தால், இந்திய அணிக்கு இந்த போட்டியை வெல்வது பெரிய கஷ்டம் ஆகிவிடும். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மாற்று வீரராக வந்து ரிங்கு சிங் பீல்டிங் செய்தார்.

திடீரென சரிந்த 2 விக்கெட்டுகள்.. மிரண்ட பவுலர்கள்... விராட் கோலி செய்த மேஜிக்!

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இல்லாத வீரர். ரிங்கு சிங் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்றார். 

டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்தார். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த ருத்ராஜ் காயத்தின் காரணமாக வெளியேற, அந்த இடத்திற்கு வந்த அபிமன்யு ஈஸ்வரன், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில், தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணிமோதும் நான்கு நாட்கள் கொண்ட போட்டிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.

எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரிங்கு சிங்கை தற்பொழுது அவருடைய இடத்திற்கு கொண்டு வந்து, அவரை மாற்று வீரராக களம் இறக்கி பீல்டிங் செய்ய வைத்திருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...