பறிபோன செஞ்சுரி வாய்ப்பு... அம்பயரின் சர்ச்சை செயலால் கடுப்பான ஜடேஜா... நடந்தது என்ன?

பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா  87 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வீசிய பந்து காலில் பட்டது. களத்தில் இருந்த அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார். 

பறிபோன செஞ்சுரி வாய்ப்பு... அம்பயரின் சர்ச்சை செயலால் கடுப்பான ஜடேஜா... நடந்தது என்ன?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் அவர் ரிவ்யூ கேட்டும் சர்ச்சைக்கு உரிய முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டதுதான் தற்போது பேசப்பட்டு வருகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 80, கே எல் ராகுல் 86 ரன்கள் குவித்தனர். 

பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா  87 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வீசிய பந்து காலில் பட்டது. களத்தில் இருந்த அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார். 

ஆனால், பந்து பேட்டில் பட்டது என உறுதியாக இருந்த ஜடேஜா உடனடியாக ரிவ்யூ கேட்டார். திரையில் அந்த பந்தின் ரீப்ளே காட்டப்பட்டது. அப்போது அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியோடு அம்பயர் பார்த்த போது, பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் காலில் பட்டது. 

இதை அடுத்து மூன்றாவது அம்பயர் தன்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என கூறினார். அடுத்து பந்து பிட்ச் ஆவது மற்றும் ஸ்டம்ப்பில் படுகிறதா என்பது குறித்து பார்க்க முடிவு செய்து அதற்கான ரீப்ளேவை பார்த்தார்.

தலைகீழாக மாறிய ஆட்டம்... இந்தியாவுக்கு கடும் சிக்கல்.. மிரள வைத்த இங்கிலாந்து வீரர்!

அதிலும் சரியாக பார்க்க முடியாததால் அதை களத்தில் இருந்த அம்பயரின் முடிவுக்கே விட்டு விட்டார். கள அம்பயர் ஏற்கனவே அவுட் கொடுத்து இருந்ததால் அவர் அவுட் என அறிவித்தார். 

இதை அடுத்து சரியாக அவுட் என தீர்மானிக்க முடியாத நிலையில் ஜடேஜாவுக்கு அவுட் கொடுத்தது தவறு என்ற சர்ச்சை வெடித்தது. கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு முடிவை சரியாக தீர்மானிக்க முடியாவிட்டால் பேட்ஸ்மேனுக்கு சாதகமான முடிவே எடுக்கப்படும். 

ஆனால், இங்கே பந்து காலில் பட்டதா? என்றே தெரியாத நிலையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...