சாதனை பட்டியலில் இணைய போகும் ஒரே தமிழன்.. அஸ்வினின் ஸ்பெஷல் ரெக்கார்ட் இதுதான்!

2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன்,  பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.

சாதனை பட்டியலில் இணைய போகும் ஒரே தமிழன்.. அஸ்வினின் ஸ்பெஷல் ரெக்கார்ட் இதுதான்!

2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன்,  பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.

இந்த நிலையில் நடக்கவுள்ள, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மாபெரும் மைல் கல்லை தொட இருக்கிறார். 

இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடினால், அது அவருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதுடன், இந்த மைல் கல்லை எட்டிய 14 வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் தனதாக்கி கொள்வார்.

அது மட்டுமல்லாமல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட்டை விளையாடிய ஒரே தமிழர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

இந்த சாதனையால், சச்சின், டிராவிட், லக்ஷ்மன், கும்ப்ளே, கபில்தேவ், கவாஸ்கர், வெங்சர்கார், கங்குலி, விராட் கோலி, இசாந்த் சர்மா, ஹர்பஜன்சிங், புஜாரா சேவாக் ஆகியோரின் பட்டியலில் அஸ்வினும் சேர்க்கப்படுவார்.

இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின், 3309 ரன்களும், 507 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.  35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 

அத்துடன்,100 டெஸ்ட் போட்டிகள் 3000 ரன்களுக்கு மேல் அடித்து 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைக்க உள்ளது.

அஸ்வினை விட கபில்தேவ் அதிக ரன்களை அடித்திருந்தாலும் அவர் 434 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார், கும்ப்ளே அதிக விக்கெட் எடுத்திருந்தாலும் அஸ்வினை விட குறைவான ரன்களை எடுத்திருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...