பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கேவால் போக முடியாது.. அணிக்கு ஆப்பு வைத்த வீரர்கள் இவர்கள் தான்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கேவால் போக முடியாது.. அணிக்கு ஆப்பு வைத்த வீரர்கள் இவர்கள் தான்!

நடப்பு  ஐபிஎல் தொடரில் தொடர்ந்து முதல் இரண்டு போட்டிகளில்  வெற்றிப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

ரஹானே மற்றும் ஜடேஜாவின் படுநிதான ஆட்டம் தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

மூன்றாம் வரிசையில் களமிறங்கி வரும் ரஹானே முதல் விக்கெட் வீழ்ந்த உடனேயே களத்துக்கு வந்து விடுகிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களின் போதே வர களத்துக்கு வந்த அவர், நிதான ஆட்டம் ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்த விடாமல் செய்தார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 192 ரன்களை துரத்திய சிஎஸ்கே அணி 9 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது ரஹானே 20 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 

அடுத்த 11 ஓவர்களில் ஒவ்வொரு பந்துக்கும் 2 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலை வந்த பின்னரே ரஹானே வேகமாக ஓட்டங்களை குவித்தார். ஆனால், அதற்குள் மேட்ச் கையை விட்டு சென்று விட்டது. 

அந்தப் போட்டியில் ரஹானே 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரஹானே.

கடந்த இரண்டு போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவும் மோசமாகவே செயற்பட்டுள்ளார். 17 பந்துகளில் 21 ரன்களும், 23 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து இருக்கிறார் ஜடேஜா. 

அதே போல டேரில் மிட்செல்லும் திணறி வருகிறார். மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் எல்லாம் பவர் பிளே மற்றும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தில் வெளுத்து வாங்கி ரன் குவிக்கின்றனர். 

ஆனால், அந்த இடத்தில் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. ஏற்கனவே, பல ஐபிஎல் தொடர்களில் இதே பிரச்சனையை சிஎஸ்கே சந்தித்து உள்ளது. 

குறிப்பாக 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலாக இருந்தது இதே ஸ்ட்ரைக் ரேட் தான். தற்போது ரஹானே, ஜடேஜாவால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...