புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. முதல் இடத்தில் இருந்தாலும் கெட்ட செய்தி!

2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.

புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. முதல் இடத்தில் இருந்தாலும் கெட்ட செய்தி!

2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், இந்தியா முதல் இடத்தில் இருப்பதாலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி மும்பை வான்கடே மைதானத்தில் தன் அரை இறுதிப் போட்டியில் ஆட வேண்டும்.

அதில் நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்தியா வெல்வது கடினம் தான். இதற்கு முன் வான்கடே மைதானத்தில் அந்த அணிகளுக்கு எதிராக இந்தியா அதிக தோல்விகளை சந்தித்துள்ளது.

தற்போது இந்திய அணி வலுவாக இருக்கிறது. எந்த அணியையும் பந்துவீச்சால் துவம்சம் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், வான்கடே ரெக்கார்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரை இறுதிப் போட்டி என்பது நாக் - அவுட் போட்டி என்பதால் ஒரு சின்ன தவறு கூட தொடரில் இருந்தே அணியை வெளியேற்ற வைத்து விடும். 

அந்த வகையில் பார்த்தால் மும்பை வான்கடேவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முந்தைய போட்டி முடிவுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு அதற்காக திட்டமிட வேண்டும்.

அது மட்டுமின்றி கடந்த 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதியில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறிய வரலாறு மற்றும் வான்கடேவில் உள்ள பலவீனம் ஆகியவற்றை சேர்த்துப் பார்த்தால் இதை கெட்ட செய்தி என எடுத்துக் கொள்ளலாம்.

முதலில் இந்த சூழ்நிலை எப்படி அமையும்? எப்படி இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அரை இறுதியில் மோதும்? தற்போது புள்ளிப் பட்டியலில் இந்தியா (16 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (12 புள்ளிகள்) முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா தனக்கு மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வென்றால் 14 புள்ளிகள் பெறும், தென்னாப்பிரிக்கா அணி தனக்கு மீதமுள்ள ஒரு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் அந்த அணியும் லீக் சுற்றின் முடிவில் 14 புள்ளிகள் பெறும். நெட் ரன் ரேட் மாறினாலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும். அரை இறுதியில் அந்த இரண்டு அணிகளும் மோதும்.

ஒருவேளை ஆஸ்திரேலியா தனது இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சித் தோல்வி அடைந்தால் நான்காம் இடத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டி நடைபெறும்.

லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இருப்பதாக வைத்துக் கொண்டால் நான்காவது இடத்துக்கு நியூசிலாந்து (8 புள்ளிகள்) அல்லது பாகிஸ்தான் (8 புள்ளிகள்) அணிகள் மோதும். 

அதில் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி நான்காவது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரை இறுதியில் மோதும்.

2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.

இதில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா மும்பை வான்கடே மைதானத்தில் தன் அரை இறுதியில் ஆடுவது உறுதி ஆகி இருக்கிறது. அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி இரண்டில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக வான்கடேவில் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதற்கு காரணம், அந்த மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது தான்.

இது தான் வான்கடேவில் இந்தியா ஆடுவதில் இருக்கும் சிக்கல். அதே சமயம், இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தற்போது உலகிலேயே உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். 

அதனால், இந்தியாவும் வான்கடேவில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா, வான்கடேவில் இலங்கை அணிக்கு எதிராக ஆடி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி மும்பை வான்கடேவில் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 வெற்றிகள், 8 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும், 6 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ஆக, வான்கடேவில் இந்திய அணிக்கு வெற்றி - தோல்வி சரி சமமாகவே இதுவரை கிடைத்துள்ளது. 

அதனால், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதை விட அரை இறுதிப் போட்டியில் எப்படி செயல்படுவது என்பதில் தான் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...