இந்திய அணியால் சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட்... மறுபடியும் ஆப்பு!
2025 சாம்பியன்ஸ் ட்ராபி எனும் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை போராடி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
 
                                2025 சாம்பியன்ஸ் ட்ராபி எனும் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை போராடி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் எந்தவொரு கிரிக்கெட் தொடரும் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவில்லை.
கிரிக்கெட் அணிகளுக்கு பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற பொதுவான எண்ணம் காரணமாக இந்த நிலை இருந்தது.
எனினும், அண்மைய வருடங்களில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி இருக்கின்றன.
இந்த நிலையில், தங்கள் நாட்டில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு போராடி உரிமையை பெற்றது.
 
இந்த தொடரில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட எட்டு முக்கிய கிரிக்கெட் அணிகள் தகுதி பெற்று இருந்தாலும், நீண்ட காலமாகவே இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் ஆடுவதில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இதே பிரச்சனை ஏற்பட்டு, பின்னர் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கான அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்பதால், மற்ற விளையாட்டு வீரர்களை பாகிஸ்தான் செல்ல அனுமதித்தாலும் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இந்திய மத்திய அரசு சம்மதிக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தானில் நடத்துவதா அல்லது துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களில் நடத்துவதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான எந்த திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் சிக்கலில் உள்ளது பாகிஸ்தான்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






