திரையில் காட்டிய கேமரா மேன்... தோனி செய்த சைகை... துள்ளிகுதித்த ரசிகர்கள்

பின்னர் 20வது ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பேட்டிங் செய்த அவர், ஒரு பந்தில் ஃபோர் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். 

திரையில் காட்டிய கேமரா மேன்... தோனி செய்த சைகை... துள்ளிகுதித்த ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினாலும் கூட ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. 

சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னை திரையில் காட்டிய கேமரா மேனை அடிப்பது போல சைகை செய்தார் தோனி.

இந்தப் போட்டியில் கடைசி 5 ஓவர்களில் ருதுராஜ் கெய்க்வாட் - சிவம் துபே ஜோடி அதிரடியாக ரன் குவித்தனர். 

தோனி கடைசி சில ஓவர்களில் தான் பேட்டிங் செய்ய வருவார் என்பதால் ரசிகர்கள் விக்கெட் விழுந்தால் தோனி பேட்டிங் செய்ய வருவாரா என காத்திருந்தனர். 

இந்த நிலையில் தோனி அறையில் இருந்ததை கேமரா மேன் பதிவு செய்தார். அது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் துள்ளிகுதித்தனர்.

அதை அடுத்து தோனி தன் கையில் இருந்த பாட்டிலை வைத்து கேமரா மேனை அடிப்பது போல சைகை செய்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பின்னர் 20வது ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பேட்டிங் செய்த அவர், ஒரு பந்தில் ஃபோர் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். 

இந்தப் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...