ஷமி விளையாட 6 மாதங்கள் ஆகும்... எப்போது மீண்டும் வருவார் தெரியுமா? ஜெய் ஷா வெளியிட்ட தகவல்!
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அணிக்கு திரும்பி வர 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அணிக்கு திரும்பி வர 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
உலகக்கோப்பை தொடரின் போதே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை முகமது ஷமி விளையாட முடியாமல் தவித்து வருகிறார். திடீரென லண்டனுக்கு அனுப்பப்பட்டு, வலது காலில் பாதம் அருகே தசைநார் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக ஷமி ஓய்வில் இருப்பதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டதுடன், ஐபிஎல் தொடரில் இருந்து முகமது ஷமி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகமது ஷமி முழு உடற்தகுதியை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும், தற்போது அறுவை சிகிச்சை காயம் குணமடைவதற்காக தீவிர ஓய்வில் உள்ளார் என்றும், அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாவடுவதும் சந்தேகம் தான் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள நிலையில் அதில் முகமது ஷமி களமிறங்குவார் என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |