ஒரே நாளில் வீணான உழைப்பு.... மோடி வருவது தெரியாது... உலககிண்ண தோல்வி குறித்து முகமது ஷமி
தென்னாப்பிரிக்கா தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முகமது சமி இடம்பெற்று இருந்தாலும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்க முடியவில்லை.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி இந்திய அணி அடைந்த உலகக்கோப்பை இறுதி போட்டி தோல்வி இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவே இல்லை. 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு கடைசி போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முகமது சமி இடம்பெற்று இருந்தாலும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முகமது சமியிடம், உலககோப்பை தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமி உலக கோப்பையை நாங்கள் இழந்தபோது ஒட்டுமொத்த தேசமே ஏமாற்றம் அடைந்தது.
நாங்கள் அந்த தொடர் இறுதி வரை எங்களுடைய 100 சதவீத உழைப்பை வெளிப்படுத்தினோம். தொடர் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இறுதிப் போட்டியில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து என்னால் விவரிக்க முடியவில்லை.
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு எங்கள் மனம் உடைந்து இருந்தது. நாங்கள் வாழ்க்கையை வெறுத்துப் போய் அமர்ந்திருந்தோம். எங்களுடைய இரண்டு மாத உழைப்பு ஒரே ஒரு மோசமான நாளால் ஒரு போட்டியால் மொத்தமாக வீணாகிவிட்டது.
இந்த தருணத்தில் தான் பிரதமர் மோடி எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார். பிரதமர் முன் சோகமாக நிற்க முடியாது. அவர் வரும்போது நாம் கொஞ்சம் மரியாதை கொடுத்து நிற்க வேண்டும்.
பிரதமர் மோடி எங்களை பார்க்க வருகிறார் என்று யாருமே எங்களிடம் சொல்லவில்லை. திடீரென்று அவர் எங்களுடைய ரூமுக்கு வந்து விட்டார். அவர் வருவதற்கு முன்பு வரை யாரிடமும் பேசவும் சாப்பிடவும் கூட எங்களால் முடியவில்லை. ஆனால் அவர் வந்த பிறகு அது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று சமி கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |