உயிருக்கே ஆபத்து.. பதறிய வீரர்... பாதியில் மேட்ச்சை நிறுத்திய அம்பயர்கள்.. நடந்தது என்ன ?

பிக் பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருவதுடன், நடந்த போட்டியொன்று 6.5 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உயிருக்கே ஆபத்து.. பதறிய வீரர்... பாதியில் மேட்ச்சை நிறுத்திய அம்பயர்கள்.. நடந்தது என்ன ?

பிக் பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருவதுடன், நடந்த போட்டியொன்று 6.5 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் இருந்தே பிட்ச்சின் ஒரு பக்கம் மட்டும் பந்து தாறுமாறாக எகிறியது.

பெர்த் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த போது, ஏழாவது ஓவரை மெல்போர்ன் அணியின் வேகப் பந்துவீச்சாளர் வில் சதர்லேண்ட் வீச, பந்து பிட்ச் ஆன போது மண்ணை பெயர்த்து எடுத்துக்கொண்டு கொண்டு எகிறியது.

ஜோஷ் இங்லிஸ் முகத்துக்கு அருகே சில பந்துகள் எகிறியதுடன், சில பந்துகள் பெரிய அளவில் பவுன்ஸ் ஆகி விக்கெட் கீப்பர் தலைக்கு அருகே சென்றது. 

போட்டி நடக்க சில மணி நேரம் இருக்கும் போது வரை அங்கு மழை பெய்ததுடன், பிட்ச்சை மூடி வைத்திருந்த போதும், பிட்ச்சின் ஒரு பகுதியில் மட்டும் மழை நீர் வடிந்து அந்த பகுதி மட்டும் இலகுவாக இருந்தது. 

அதனால் பிட்ச்சின் ஒரு பகுதி மட்டும் மேடு பள்ளமாக மாறியதுடன், அதே இடத்தில் பந்து பிட்ச் ஆன போது பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகத் துவங்கியது. இது தொடர்ந்த நிலையில், ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்த போது எதிர்முனையில் இருந்த ஆரோன் ஹார்டி இது போன்ற மோசமான பிட்ச்சில் பேட்டிங் செய்வது ஆபத்தானது என புகார் கூறினார். 

இந்த நிலையில், பந்து ஆஃப் சைடில் போனதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், பந்து உடலுக்கு நேராக வந்து பவுன்ஸ் ஆனால் முகம், கழுத்து, தலையில் பலமாக தாக்கும் அபாயம் உள்ளது. அதை ஆரோன் ஹார்டி சுட்டிக் காட்டிய நிலையில் அம்பயர்கள் விவாதம் செய்தனர். 

பின் போட்டியை சிறிது நேரம் நிறுத்தி விட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகளுடன் போட்டியை நிறுத்தி வைப்பது குறித்து பேசினர். அதன் பின் 6.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போட்டியை கை விடுவதாக அறிவித்தனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...