லியோ விமர்சனம் | வெறித்தனத்தின் உச்சம்.. நடிப்பில் பட்டையை கிளப்பிய தளபதி
Leo Kollywood Movie Review in Tamil : நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள்.
ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார்.
இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும்.
பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ சாகவில்லை என்று முடிவு செய்வார்கள். லியோ தான் பார்த்திபனா, இல்லை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரை தவறாக புரிந்து கொள்கிறார்களா என்பதே கதை.
லியோ படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் அது விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது. லியோ மற்றும் பார்த்திபனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய்.
இவர் நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
படத்தில் சில மைனஸுகள் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தன் நடிப்பால் சரிகட்டிவிடுகிறார் விஜய். லியோ தாஸாக ஒரு Badass ஆக வித்தியாசமாக மிரட்டியிருக்கிறார் விஜய்.
தந்தை, கணவராக விஜய்யின் நடிப்பு சிறப்பு. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு பவர்ஃபுல்லான வில்லன் வேண்டும். அது தான் லியோவில் மிஸ்ஸிங். அர்ஜுன் மிரட்டியிருந்தாலும் அவர் படம் முழுக்க வரவில்லை.
குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளார் லோகேஷ். அது ஆக்ஷனுக்கு இடையூறாக வந்துவிட்டது.
வில்லன்களின் உலகை விரிவாக காட்டியிருந்தாலும், அது கவரவில்லை. சஞ்சய் தத், அர்ஜுன் ஆகிய இரண்டு நல்ல நடிகர்கள் வில்லன்களாக நடித்திருக்கும்போதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அனல் பறக்கவில்லை. இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தை தொட்டுவிட்டது.
லியோ படம் துவங்கிய அரை மணிநேரத்திலேயே அடுத்தது என்னவென்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் கொடுத்து ரசிகர்களை திருப்தி அடைய செய்திருக்கிறார் லோகேஷ்.
த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் சும்மா வந்துவிட்டு செல்லவில்லை. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |