ஜோ ரூட் படைத்த உலக சாதனை... சச்சினின் டெஸ்ட் சாதனையை உடைத்தாரா? உண்மை என்ன?
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார்.
இதன் மூலம் அவர் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் உண்மை என்ன என்று பார்க்கலாம்.
13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைச் செய்துள்ள ஜோ ரூட், குறைந்த போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.
முன்னதாக, 159 டெஸ்ட் போட்டிகளில் ஜாக்கஸ் காலிஸ் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தது சாதனையாக இருந்த நிலையில், ஜோ ரூட் அதனை முறியடித்திருக்கிறார்.
இதேவேளை, சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளில் தான் 13,000 ரன்களைக் கடந்ததுடன், ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும் அதனை செய்திருந்தனர்.
போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் வேகமாக 13,000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர்களில் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
ஆனால், இன்னிங்ஸ் அடிப்படையில் ஜோ ரூட் தான் இந்த ஐவரில் மெதுவாக 13,000 ரன்களை எட்டிய வீரராக உள்ளார். ஜோ ரூட் 278 இன்னிங்ஸ்களில் 13000 ரன்களை எடுத்து உள்ளார்.
ஆனால், சச்சின் டெண்டுல்கர் 266 இன்னிங்ஸ்களிலேயே 13,000 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும், இந்த ஐவரில் இன்னிங்ஸ் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கர் தான் விரைவாக 13,000 ரன்களை எட்டியவர்
2010 ஜனவரி மாதம் சச்சின் டெண்டுல்கர் செய்த இந்த சாதனையை இதுவரையாராலும் முறியடிக்க முடியவில்லை என்பதுடன், முதன் முதலில் 13,000 ரன்களை எட்டிய வீரரும் சச்சின் தான்.
சச்சின் டெண்டுல்கர் - 266 இன்னிங்ஸ்கள், 163 போட்டிகளில் 13000 டெஸ்ட் ரன்களை எடுத்த நிலையில், ஜாக்கஸ் காலிஸ் - 269 இன்னிங்ஸ்கள், 159 போட்டிகளில் அதனை சாதித்துள்ளார்.
அத்துடன், ரிக்கி பாண்டிங் - 275 இன்னிங்ஸ்கள், 162 போட்டிகளில் 13000 டெஸ்ட் ரன்களை எடுத்த நிலையில் ராகுல் டிராவிட் - 277 இன்னிங்ஸ்கள், 160 போட்டிகளில் 13000 டெஸ்ட் ரன்களை எடுத்ததுடன், ஜோ ரூட் - 278 இன்னிங்ஸ்கள், 152 போட்டிகளில் 13000 டெஸ்ட் ரன்களை எடுத்து இருக்கின்றார்.