9 நாள் ஓய்வு இருக்கு.. நான்காவது டெஸ்டில் எதுக்கு பும்ராவுக்கு ஓய்வு? கம்பீரின் முடிவுக்கு எதிர்ப்பு!
இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள சூழலில் அடுத்த டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா இல்லை அவருக்கு ஓய்வு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இந்த தொடரில் பும்ரா வெறும் மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார் என கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் அணில் கும்ப்ளே, கடைசியாக நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கும் பும்ரா தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் மட்டும் இந்திய அணி நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக பும்ராவை அடுத்த போட்டியில் விளையாட வைக்க குரல் கொடுப்பேன். ஏன் என்றால் அடுத்த டெஸ்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருந்து, ஒருவேளை இந்தியா அந்த போட்டியில் தோற்று விட்டால், அவ்வளவுதான். தொடர் முடிந்து விட்டது. இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும்.
அதன் பிறகு பும்ரா கடைசி டெஸ்டில் விளையாடினால் என்ன விளையாடவில்லை என்றால் என்ன? எனவே பும்ராவை கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும்.
ரிஷப் பண்ட் காயம்... பும்ரா நிலை என்ன? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ன செய்யபோகிறார் கம்பீர்!
ஆனால், அவர் மூன்று டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என கம்பீர் அறிவித்திருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் பெரிய இடைவேளை இருக்கின்றது.
நீங்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அணில் கும்ப்ளே வலியுறுத்தி இருக்கின்றார்.