விரக்தியில் இந்திய வீரர்.... 25 வயதில் ஓய்வு.... காரணம் பிசிசிஐ... என்ன நடந்தது?
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியில் மாற்று வீரராக இருந்த இஷான் கிஷன், அடுத்து டெஸ்ட் அணியிலும் மாற்று வீரராகவே இருந்தார்.
இந்திய ஒருநாள் அணியில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகிய ஐந்து பேரில் மூன்று பேர் இந்திய அணியில் ஜாம்பவான்களாக வலம் வந்தனர்.
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் சுப்மன் கில் தொடர்ந்து இடம் பெற்று வரும் நிலையில், இஷான் கிஷன் நிலைமை மோசமாகவே உள்ளது.
இதுவரை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இஷான் கிஷன் இடம்பெற்றாலும், பிளேயிங் 11இல் அவருக்கு தொடர்ந்து இடம் கொடுக்கப்பட இல்லை.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இஷான் கிஷனால் இரண்டு பணிகளை செய்ய முடியும் என்றபோதிலும், மாற்று வீரர் என்ற இடத்திலேயே அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
விக்கெட் கீப்பிங் சரியில்லை என்றாலும் கூட முழு நேர பேட்ஸ்மேனாக அவரை பயன்படுத்தலாம். அவர் கடந்த காலங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து நிரூபித்து இருக்கிறார்.
இந்த நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரை மாற்று வீரராகவே பயன்படுத்தும் திட்டத்தை பிசிசிஐ தேர்வுக் குழு எடுத்துள்ளதாகவும் அதற்கு விராட் கோலியும் ஒருவகையில் காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டாலும் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்பதால் அவர் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடுவது சந்தேகமாக இருந்தது.
அடம்பிடித்த ரோகித் சர்மா... ஜெய் ஷா வரை சென்ற சம்பவம்.. பிசிசிஐ எடுத்த தீர்மானம் என்ன
அதனால், இஷான் கிஷன் எப்படியும் அணியில் இடம் பெற்று மூன்றாம் வரிசை அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்குவார் என்று எதிர்பாரக்கப்பட்டது.
ஆனால், தற்போது விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருப்பதால், மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பார்கள்.
மீதமிருக்கும் ஆறாம் வரிசை அல்லது ஏழாம் இடத்தில் ஒரு ஃபினிஷரை ஆட வைப்பதே சரியாக இருக்கும். எனவே, விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜிதேஷ் சர்மாவை அந்த இடத்தில் ஆட வைக்க தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
இந்த நிலையில், 25 வயது ஆகும் இஷான் கிஷனுக்கு இப்போது சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இனி எப்போது கிடைக்கும்? என்ற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியில் மாற்று வீரராக இருந்த இஷான் கிஷன், அடுத்து டெஸ்ட் அணியிலும் மாற்று வீரராகவே இருந்தார்.
மாற்று வீரராகவும், அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதால் மன சோர்வு ஏற்பட்ட நிலையில், சோர்வாக இருப்பதாக கூறி பாதி தொடரில் அணியில் இருந்து தாமாக விலகினார்.
மீண்டும் அவரை மாற்று வீரராக வைத்து இருந்தால் அவர் 25 வயதிலேயே ஓய்வு பெற்று விடலாம் என்றும் அந்த அளவுக்கு பிசிசிஐ அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.