சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்கவிருந்தது இவரா? 

சந்திரமுகி: கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. 

Sep 30, 2023 - 19:21
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்கவிருந்தது இவரா? 

சந்திரமுகி: கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. 

இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்து அசத்தி இருப்பார். அந்த கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகையாவது நடித்திருந்தாலும் கூட இவருடைய அளவிற்கு நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். 

ஆனால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகை ஜோதிகாவே இல்லையாம். முதல் முறையாக நடிகை சிம்ரன் தான் தேர்வு செய்யப்பட்டாராம்.

முதலில் ரஜினிகாந்திடம் படத்தின் கதையை கூறிவிட்டு சந்திரமுகியாக யாரை நடிக்க வைக்கலாம் என பேசினார்களாம். அந்த சமயம் சிம்ரன் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நிலையில், அவரை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டு இருந்தார்களாம். 

ஆனால், அந்த சமயம் சிம்ரன் திருமணம் செய்துகொன்டு கர்ப்பமாக இருந்தாராம். சந்திரமுகி படத்தில் தாவி தாவி நடனம் ஆடி நடிப்பது போல காட்சிகள் இருந்ததால் தன்னால் நடிக்கவே முடியாது என கூறினாராம். 

பிறகு இயக்குனர் பி,வாசு இந்த கதையை எழுதும்போதே சௌந்தர்யா தான் சந்திரமுகியாக நடிக்கவேண்டும் என்று யோசனை வைத்திருந்தாராம். ஆனால், 2004-ஆம் ஆண்டு விமான விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார். 

அவர் உயிரியுடன் இருந்திருந்தால் அவர் தான் சந்திரமுகி படத்தில் நடித்திருப்பார் எனவும் இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோரை  வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி இருக்கிறார். 

இந்த திரைப்படம் கடந்த  செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!