தோனியால் ஏற்பட்ட மோசமான நிலை... இர்பான் பதான் திடீர் குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய கரியரின் கடைசி கட்டத்தில் தான் சந்தித்த இக்கட்டான நிலைக்கு காரணம் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று தனது குற்றச்சாட்டினை இர்பான் பதான் முன் வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் போது பயிற்சியாளர் என்னிடம் எனது கையில் எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். அப்போது நான் அவரிடம் என்னுடைய இடத்தை யார் முடிவு செய்வது என்று கேட்டேன்.
ஆனால் அவர் என்னிடம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இருப்பினும் அப்போதே எனக்கு தெரியும் அணியின் பிளேயிங் லெவனில் யாரை விளையாட வைக்க வேண்டும்? என்பது கேப்டனின் முடிவுதான்.
எனவே என்னை தோனி தான் பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடிவு செய்தார். தோனி எடுத்த அந்த முடிவு சரியா? தவறா? என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அணியின் கேப்டன் தான் வெற்றிக்கான சரியான வழியை உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் தோனி முடிவெடுத்து இருந்தாலும் அது எனக்கு மோசமான உணர்வை தந்ததாக இர்பான் பதான் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், தோனி எடுத்த முடிவால் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஓய்வு முடிவை எடுக்க நினைத்ததாக கூறியிருந்த வேளையில் தற்போது இர்பான் பதானும் அதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
