எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இலங்கையில்? பிசிசிஐ தீவிர ஆலோசனை! சாத்தியமா?

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இலங்கையில்? பிசிசிஐ தீவிர ஆலோசனை! சாத்தியமா?

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கும் அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. 

ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு, அணிகளின் உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பு உரிமை இழப்பு, விளம்பர வருவாய் இழப்பு உள்ளிட்டவை குறித்து ஐபிஎல் நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் கலந்தாலோசனை நடத்தி வருகிறது. 

இதில் எட்டப்படும் முடிவைப் பொறுத்து ஐபிஎல் போட்டிகள் ரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதுடன், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இப்போது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

போர் பதற்றம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, எப்படி இருந்தாலும் இப்போது எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது என்ற முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் வந்துவிட்டது. 

எனினும், பதற்றம் குறைந்த உடனே ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் ஐபிஎல் இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்தும் ஐபிஎல் நிர்வாகிகள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் தீவிரமாக உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மத்திய அரசுக்கு தேவையில்லாத சிக்கலை உருவாக்கும்.