அதிரடியாக மாற்றப்பட்ட ஆறு ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்... முழு விவரம் இதோ!

IPL 2024 News in Tamil: ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத வகையில்ஆறு அணிகளின் கேப்டன்கள் 2024 ஐபிஎல் தொடரில் மாற்றப்பட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிரடியாக மாற்றப்பட்ட ஆறு ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்... முழு விவரம் இதோ!

IPL 2024 News in Tamil: ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத வகையில்ஆறு அணிகளின் கேப்டன்கள் 2024 ஐபிஎல் தொடரில் மாற்றப்பட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காயம் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு அணிகளின் கேப்டன்கள் மீண்டும் அணிக்கு கேப்டனாக திரும்பி உள்ளனர். 

அத்துடன், எனைய நான்கு அணிகள் புதிய கேப்டன்களுடன் களமிறங்க உள்ளன.

2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கேப்டனை மாற்றியது 

மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட நாள் கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். 

தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்கள் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கிரம் நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ  20.50 கோடி கொடுத்து வாங்கி கேப்பனாக்கியது அந்த அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முந்தைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி விட்டதால் அவரே கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். 
டெல்லி கேபிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர் முந்தைய கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு வழிவிட்டு விலகி இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 14 ஆண்டு கால கேப்டன் தோனி தனது பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்து உள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களின் முந்தைய கேப்டன்களுடனே விளையாட உள்ளன.

2024 ஐபிஎல் தொடரின் கேப்டன்கள் விவரம்

  1. ருதுராஜ் கெய்க்வாட் - சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ்
  3. பாப் டு ப்லேசிஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  4. ரிஷப் பண்ட் - டெல்லி கேபிடல்ஸ்
  5. பாட் கம்மின்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  6. ஸ்ரேயாஸ் ஐயர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  7. சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ்
  8. சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ்
  9. ஷிகர் தவான் - பஞ்சாப் கிங்ஸ்
  10. கே எல் ராகுல் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...