ஹர்திக்கிற்கு எதிராக பும்ராவை தூண்டிய ரோஹித்... அணியைவிட்டே தூக்கிய நிர்வாகம்?
கடந்த ஐ.பி.எல் சீசனில், முகமது ஷமியை களத்திலேயே கடுமையாக ஹர்திக் பாண்டியா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஐ.பி.எல் சீசனில், முகமது ஷமியை களத்திலேயே கடுமையாக ஹர்திக் பாண்டியா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை பவுண்டரி லைனில் நிற்க வைத்தது மட்டுமல்லாமல், அவரை அங்கும் இங்கும் அலைய வைத்தார்.
அதுமட்டுமல்ல, களத்தில் வீரர்கள் தவறு செய்யும்போது, தன்னையே அறியாமல், ஆத்திரத்தில் கத்தும் இப்படிப்பட்டவருக்கு ஏன் கேப்டன்ஸியை கொடுக்க வேண்டும் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. இது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸி குறித்து அதிருப்தி நிலவி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மீட்டிங் நடைபெற்ற சமயத்தில் ரோஹித் சர்மா, ஜஸ்பரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டும், தனியாக ஒரு அறையில் மீட்டிங் போட்டனர்.
தனியாக மீட்டிங் போட்ட ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஹர்திக் கேப்டன்ஸி குறித்து, அனைத்து வீரர்களிடம் கருத்து கேட்டுவிட்டு, அதன்படி கேப்டன்ஸி மாற்றம் குறித்து ஆராய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம், மனுவாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ஊதியமாக வழங்கப்படும் நிலையில், பும்ராவுக்கு 12 கோடி மட்டுமே ஊதியமாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவைவிட அதிக தொகைக்கு தக்க வைத்தால் மட்டுமே மும்பை அணியில் நீடிப்பேன், இல்லையென்றால் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் கலந்துகொள்வேன் என நிர்வாகத்திடம் பும்ரா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பும்ரா இப்படி கண்டிஷன் போட ரோஹித் சர்மாதான் காரணம் என மும்பை நிர்வாகம் கருதுவதால்தான், அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்க, அவரை இம்பாக்ட் வீரராக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி போட்டியிலும் இதே நிலைதான் நீடிக்குமாம். அனுபவமிக்க கேப்டனாக இருந்தாலும், ஹர்திக்குடன் மோதல் போக்கு இருப்பதால்தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |