பிளேயிங் லெவனில் இளம் வீரருக்கு வாய்ப்பு... பிளானை மாற்றும் ரோகித் சர்மா!

கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார். 

பிளேயிங் லெவனில் இளம் வீரருக்கு வாய்ப்பு... பிளானை மாற்றும் ரோகித் சர்மா!

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார். 

இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவன் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கு தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. 

இதனால் ஜித்தேஷ் சர்மாவை நீக்கிவிட்டு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று பந்துவீச்சை பொறுத்தவரை ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இந்திய அணிக்கு ஆப்பு வைக்கும் திட்டம்.. ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசிய ரசிகர்கள்

இதுபோன்று ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வளிக்கப்பட்டு கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால் ஜெய்ஸ்வால் நன்றாக விளையாடி வருவதால் அவருக்கு கடைசி போட்டியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்க ரோகித் சர்மா ஆர்வம் காட்டி வருகிறார். 
அத்துடன், இந்த தொடரில் பெரிய அளவில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பேட்டிங் வரிசை மாற்றப்படும் என்றும் தெரிகிறது.

சஞ்சு சாம்சன் போட்டிக்கு திரும்புவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...