விராட் கோலி குறித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!
தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரரான விராட் கோலி கடந்த முறை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து இருந்தார். அதனால், அவர் இந்த முறையும் அதிக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க அணி வேகப் பந்துவீச்சாளர் ஃபேனி டி வில்லியர்ஸ், சில யோசனைகளை கூறி இருக்கிறார்.
விராட் கோலிக்கு எப்படி பந்து வீசக் கூடாது எனக் கூறி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை எச்சரித்து இருக்கிறார். அதே சமயம், விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தும் வழி என்ன என்பது பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.
மனம் உடைந்த இஷான் கிஷன்.. வெளியான அதிர்ச்சி தரும் உண்மை.. இரக்கம் காட்டாத ரோஹித் - டிராவிட்!
விராட் கோலியை அவுட் ஆக்க நான்காவது ஸ்டம்ப்பிற்கு தொடர்ந்து பந்து வீச வேண்டும். என்றும், அவர் எப்போது தவறு செய்வார் என காத்திருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் சில சமயம் பந்து எட்ஜ் ஆகி கோலி ஆட்டமிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனை விட்டு விட்டு கோலியை தாக்கும் வகையில் பந்து வீசினால் அவர் நேராக ஆடி ரன் சேர்ப்பார் என ஃபேனி டிவில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |