இனி நேரா வீட்டுக்கு தான்.. அஸ்வினுக்கு டாடா சொன்ன ரோஹித் சர்மா..?

அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது. 

இனி நேரா வீட்டுக்கு தான்.. அஸ்வினுக்கு டாடா சொன்ன ரோஹித் சர்மா..?

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இனி உலகக்கோப்பை தொடரில் எந்த போட்டியிலும் ஆட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்திய அணியில் நடந்த சில மாற்றங்களே கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் எனவும், மேலும் இந்திய அணி அரை இறுதியை நெருங்கியது, இந்திய அணி ஆடப் போகும் போட்டிகளின் பிட்ச் ஆகியவையும் அஸ்வினுக்கு எதிராகவே அமைந்துள்ளது.

அதனால், 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் ஆடியதே அவரின் கடைசி போட்டியாகவும் அமைய உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முன் ஸ்பின்னர் அக்சர் பட்டேல் காயத்தால் விலகிய நிலையில், இந்திய அணி அதிரடியாக டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வந்த அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் அஸ்வினுக்கு அழைப்பு விடுத்தது. உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடினார்.

ஆனால், அதன் பின் அஸ்வினுக்கு எந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியா ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் கூடுதல் ஸ்பின்னர் அவசியம் இல்லை என்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அது மட்டுமின்றி, ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் இந்திய அணி முகமது ஷமியை அணியில் சேர்த்தது. அவர் மூன்று போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். 

அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. அதே சமயம், பாண்டியா இல்லாத நிலையில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்பதால் ஷமி, பும்ரா, சிராஜ் அணியில் நீடிக்கின்றனர். 

இந்த மூவர் கூட்டணியில் கடைசி உலகக்கோப்பை போட்டி வரை கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை.

அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது. 

குல்தீப் யாதவ் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார், அதனால், அவர்களையும் மாற்றப் போவதில்லை. பேட்டிங்கில் பாண்டியா இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆறாம் வரிசையில் இறங்க வேண்டியது அவசியம்.

மேலும், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் கொண்ட ஐவர் கூட்டணி கடந்த மூன்று போட்டிகளில் பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது. அதனால், அதில் மாற்றம் செய்ய கேப்டன் ரோஹித் சர்மா விரும்ப மாட்டார். அஸ்வினுக்கு அதனாலேயே வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

மேலும், இந்திய அணி அடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூரில் ஆட உள்ளது. அங்கே சிறிய பவுண்டரி என்பதால் கூடுதல் ஸ்பின்னரை ஆட வைப்பது ஆபத்து தான். மேலும், அரை இறுதிப் போட்டிகள் நடைபெறும் மும்பை மற்றும் கொல்கத்தா இரண்டு மைதானங்களும் கூடுதல் ஸ்பின்னர் அவசியம் இல்லாத இடங்கள் தான்.

இறுதிப் போட்டி நடைபெறும் அதே அகமதாபாத்தில் இந்திய அணி அஸ்வின் இல்லாமல், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால், இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இந்திய அணியில் களமிறங்க வாய்ப்பே இல்லை.

அனேகமாக இதுவே அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறுவது கடைசியாக இருக்கும். இனி அவர் வயதை கருத்தில் கொண்டு இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை. 

உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் ஆடியதை கொண்டு திருப்தி அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார் அஸ்வின். அதே சமயம், அவர் டெஸ்ட் அணியில் இன்னும் சில ஆண்டுகள் முக்கிய ஸ்பின்னராக தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...