தங்க நகை அடகு வைத்திருப்போர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தங்க நகை அடகு வைத்திருப்போர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகளில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

இதன் விளைவாக தங்க நகைகளை அடமானம் வைக்கும் செயற்பாடு பொதுமக்களிடத்தில்  வேகமாக அதிகரித்துள்ளது.

2019 ஆண்டில் ரூபா 210 பில்லியன் ஆகவிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...