தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. விலை எவ்வளவு தெரியுமா?

Gold and silver rate: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

Oct 23, 2024 - 10:26
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. விலை எவ்வளவு தெரியுமா?

Gold and silver rate - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 

அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று (22) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58,400க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று(23) விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 7,300ரூபாய்க்கும் சவரன் 58,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி சவரன் ரூ. 48,200க்கும், கிராம் ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!