நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.