இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி – தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
கடந்த வார இறுதியிலிருந்து விலை மாற்றமின்றி நிலைத்திருந்த தங்கம், இன்று பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 11, 2025) தங்க விலையில் திடீர் குறைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியிலிருந்து விலை மாற்றமின்றி நிலைத்திருந்த தங்கம், இன்று பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 336,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 309,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கிராம் அடிப்படையில் பார்க்கும்போது, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 38,650 ரூபாயாகவும் உள்ளது. அதேநேரம், வெள்ளி கிராம் ஒன்று 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
