ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் காலமானார் - ரசிகர்கள் சோகம்!
மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
 
                                ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) காலமான செய்தியால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதுடன், அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் உள்ளடங்கும்.
அதன்பின்னர், கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட்ட் அவர், அடிலெய்டில் நடந்த அறிமுகப் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இருப்பினும், அவரது பந்து வீச்சு முறை அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கிரிக்கெட் வாழ்க்கை 25 வயதிலேயே முடிவுக்கு வந்தது.
முதல் தர கிரிக்கெட்டில், நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அவர் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






