டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சிக்ஸர்... பாகிஸ்தான் கனவை  சுக்கு நூறாக உடைத்த வீரர்! 

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரர் கான்வே 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 

டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சிக்ஸர்... பாகிஸ்தான் கனவை  சுக்கு நூறாக உடைத்த வீரர்! 

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி  தொடரை இழந்தது.

இந்த நிலையில்,  மூன்றாவது போட்டியில் வென்று ஆறுதல் அடையும் திட்டத்தை நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ஃபின் ஆலன் சுக்கு நூறாக உடைத்தார் 

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரர் கான்வே 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த டிம் செய்ஃபர்ட் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதனிடையே ஃபின் ஆலன் அதிரடி பேட்டிங் செய்து வந்தார். ஹாரிஸ் ரௌப் வீசிய ஒரு ஓவரில் 28 ரன்கள் குவித்து வியப்பை ஏற்படுத்தினார்.

17.2 ஓவரில் 62 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஆலன். நியூசிலாந்து வீரர் ஒருவரின் டி20 போட்டியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பதுடன், 16 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து இருந்தார். 

தனது ஸ்கோரில் 85 சதவீதத்தை பவுண்டரிகள் மூலமே அவர் எடுத்து இருந்தார். ஃபின் ஆலன் 16 சிக்ஸ் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்ரத்துல்லா ஜஜாய்-யின் சாதனையை சமன் செய்தார்.

அயர்லாந்து அணிக்கு எதிராக ஜஜாய் அந்த சாதனையை 2019இல் நிகழ்த்தி இருந்ததுடன், தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக 16 சிக்ஸ் அடித்து சாதனையை சமன் செய்தார் ஃபின் ஆலன்.

அதனையடுத்து, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...